Monday, December 31, 2012

Mayan Version 2.0

O.M.G எங்க வீட்டு calender is going to end today !!!!!
என்ன ஆக போகுதோ.....

Saturday, February 25, 2012

My article on Love Marriage vs Arranged Marriage on Penmai.com

காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?
இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.

காதலித்தவரை கரம்பிடிப்பது கரம்பிடித்தவரை காதலிப்பது இவை இரண்டுமே அறம் என கொள்ளபடும் எனினும் நான் காதலித்தவரை கரம்பிடிப்பது சிறந்தது என்றே சொல்ல, கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்

காதலித்தவரை கரம்பிடிப்பது என்பது நம்முடய (இருவர்) உணர்வு, புரிதல், எண்ணம், அழுகை, இவைகளை உணர்ந்து கடந்த பிறகு இந்த சமூகம் சொல்லும் திருமணம் என்ற கட்டுபாடு நிபந்தனைகள் இவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஆனால் கரம்பிடித்தவரை காதலிப்பது என்பது சமூக கட்டுபாடுகளை மட்டுமே ஏற்று கொண்ட பிறகு புரிதல் கொள்வது.

40 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு வரும் நெருக்கம், ஒத்த எண்ண அலைகள்(wavelength or frequency), உண்மையான தாம்பத்தியம் இவற்றை சில ஆண்டு கால காதல் சொல்லி கொடுத்துவிடும், பிறகு திருமணம் என்பது புரிதலின் தொடர்ச்சியே இது காதல் திருமணம் செய்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும், இன்னும் அப்படி வாழும் காப்பிய நாயகர், நாயகிகள் இருக்கிறார்கள் ஆனால் இதிகாசம் எழுத தான் ஆள் இல்லை, ஆனால் நிச்சயித்த திருமணம் நின்று அடிபட்டு, பக்குவபடவேண்டும் !!!!

காதலும், காதல் திருமணமும் தவறில்லை, இது பெற்றவர்களின் மனதை புண் படுத்தும் என்பது உண்மை தான், ஆனால் மீதி வாழ்க்கை வாழ போவது என்னவோ நாமதானே.

நம்முடய தேடல், தேவை, புரிதல் எண்ணம், கருத்து ஒற்றுமை, வெளிப்படை உணர்வு(transparency ) இணக்கம்(mutual understanding), அந்யோனியம் இந்த அடிப்படை குணங்கள் மட்டுமே உலக உறவுகள் நிலைக்க செய்யும் அடிப்படை தத்துவம். இவை காதல் திருமணத்தில் நிலைபெறுகிறது நிறைவு பெறுகிறது, ஆனால் நிச்சயித்த திருமணத்தில் இவை சந்தேகதிற்கு உரியவாயே.

குட்டி மரணம்(hypothesis):

ஒருவனின் குணம், செயல் இவை வெளிபடுத்தும் விளைவு, இதை வைத்து அவள் நமக்கு சரியானவள் என்று கண்டுபிடிக்க முடியும், எப்போது என்றாள் உறவுகளுக்கு சிக்காத நிலையில் அதை கண்டுபிடிக்க முடியும், இது காதலின் முதல் பருவத்தில் வரும் எப்படி என்றாள்
நட்பும் இல்லாமல் காதலும் இல்லாமல் ஒரு இழை காதலை வெளிபடுத்துவதற்கு (love propose )செய்வதற்கு முன்னாள் சில காலம் நம்மிடயே ஊசல் ஆடும் இதை குட்டி மரணம் என்று கூட சொல்லலாம், அதில் ஒருவனின் சுயம் (identity)வெளிவரும் அதை கொண்டே நாம் தீர்மானிதுவிடலாம் இது காதலில் மட்டுமே சாத்தியம். (இவை அனுபவதின் அடிப்படையில் வருபவை இது hypothesis)

ஆனால் நிச்சயித்த திருமணத்தில் இதை கண்டுபிடிக்க முடியாது. அதற்கு காதல் கடவுள் உங்களுக்கு வழியும் செய்யவில்லை. நல்லதோ கேட்டதோ ஏற்று கொள்ள மட்டும் துணிவு வேண்டும்.

தேடலின் வழி கிடைக்கும் ஒரு பொருளுக்கு உலகம் மதிப்பு கொடுக்கும் அப்படியே காதல் திருமணமும்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து தேடி திரிந்து
உணர்வு எண்ணம் பகிர்ந்து
மதம், இனம் துறந்து.
மொழி, உலகம், தூக்கம் மறந்து
இவன் (அ) இவள் நம்க்கும் நம் வாழ்க்கை பயனதிற்கும் சரிவருவாள், இவளே துணை என்று காதல் புரிந்து, கரம் பிடித்த பிறகு தொடரும்
வாழ்க்கை என்பது சொல், பொருள் குற்றம் நீங்கி, இலக்கண இலக்கிய ரசனை ததும்பும் வானவர் போற்றும் இதிகாசம், காப்பியம் போன்றது ஆனால் நிச்சயித்த திருமணம் என்பது எண்ணங்கள் சண்டையிட்டு எழுத்தில் வராத கவிஞ்னின் மனம் போன்றது.

இதயம் சொல்லுவதை மூளையும், மூளை சொல்லுவதை இதயமும் புரிந்து கொள்ளுவதற்கு முன்னாள் இன்னோர் இதயம் அதை புரிந்து கொண்டு அதை செயல் படுத்துமாயின் அது காதல் திருமணத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் அப்போது நிச்சயித்த திருமணம் மட்டும் வாய் அசைவிற்கு காத்துக் கொண்டிருக்கும்.எனவே காதல் திருமணம் சிறந்தது.