Monday, December 26, 2011

பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பது குடும்பமா? சமுதாயமா?

பெண்மை தோழர் தோழிகளுக்கு வணக்கம் பெண்களின் முன்னேற்றத்திற்கு 
தடைக்கல்லாக இருப்பது சமுதாயமே என்ற தலைப்பில் நான் எழுத வந்து 
இருக்கிறேன்

எது சமுதாயம்:

சமூகம் என்பது என்னை பொறுத்தவரை கதவுகள் இல்லாத group house போல, கதவு இல்லாத மாநகராட்சியின் பழைய பேருந்து போல். அந்த பேருந்தில் யார் வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம், கவிதை எழுதலாம், கிறுக்கலாம், உணர்வு பிழம்புகள் கட்டுபடாதபோது அது உடைபடலாம். அந்த பேருந்தின் சீட்டுகளும், இஞ்ஜினும் socialism பயின்றவை அவை யார் உட்கார்ந்தாலும் ஏற்றுக்கொள்ளும், யார் நின்றாலும் பயணம் செய்யும். அப்படி பார்க்கும் போது இந்த சமூகம் என்ற பேருந்திற்கு இது தான் வரையறை, சித்தாந்தம் என்று கிடையாது. ஒரு சமையம் ஏற்றி பேசும், சில சமையம் தூற்றியும், மாற்றியும் பேசும். இன்னும் சில சமயம் மிதிபடும் கால்களுக்கு மன்னிப்பு கோராது எனவே சமூகம் சார்ந்த பிரச்சனைகள் எவை தடை கல்லாக இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி:

நான் கடந்த, கண்ட சமுதாயத்தின் அடிபடையில் எழுதுகிறேன். எவ்வளவு முன்னேறினாலும் ஒரு பெண்ணுக்கு உடன் இருக்கும் பெண்ணே எதிரி ஆகிறாள். இவை இயற்கை விதியா என்பது ஆராயச்சிக்குரியவை. பொருள் ஈட்டும் இடமாக இருக்கட்டும், சமுகமாக இருக்கட்டும் அல்லது குடும்பமாக இருக்கட்டும் முன்னேற்றம் அடையும் பெண்ணின் தவறுகள் உண்ணிப்பாய் பார்க்க படுகிறது. அறிவும் அதன் முதிர்ச்சியும் இல்லாத இன்னொரு பெண்ணால் அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

ஆண் சமூகம்

பெண் எப்படி இருக்க வேண்டும், நடக்க வேண்டும், உட்கார வேண்டும், சிரிக்க வேண்டும் , அழ வேண்டும், சமூகத்தில் அவள் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஆண்களே எழுதுகிறார்கள் . தான் எப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைபதற்கு முன்னாள் ஆண்கள் முந்திக்கொண்டு கதைகளிலும், கவிதைகளிலும், இதிகாசங்களிலும், பழமை சனாதன கொள்கையிலும் எழுதி தள்ளி விட்டார்கள், பெரும்பாலும் அவைகள் தான் இன்று பிரேசுரம்ஆகி புத்தகமஆக இருக்கிறது.

இது பெண்கள் குறித்து ஆண்கள் கொண்ட அக்கறையாக எனக்கு தெரியவில்லை. இவள் புது விதி எழுத கூடாது என்ற பயதின் முன் ஏற்பாடு தான் இவை. இவற்றிற்கு காலம் பதில் சொல்லும் இல்லை என்றாள் பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆண் சமூகம் இடையூரால் அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

சமூகம் அளிக்கும் நீதியின் அடிப்படையில்:

"மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைதால் பொன்குடம்." ஒரு ஆணும், பெண்ணும் சமூகம் சொல்லும் ethical behaviours இல் இருந்து விலகி வரும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாராமுகமாய் தீர்ப்பு சொல்கிறது இந்த சமூகம். இங்கே ஆண் செய்யும் தவறை எளிதில் விட்டு விடுகிறது ஆனால் பெண்ணின் உணர்வுகள் மீது தான் கசையடி.. ஆண் செய்யும் பொது சக ஆண் அதை பெரிது படுத்துவது இல்லை ஆனால் பெண் செய்யும் பொது சக பெண் அதை பெரிது படுத்துகிறாள், இதை சமூகத்தை தூரத்தில் இருந்து நான் பார்தவரை கண்ட அனுபவம். இங்கு நீதியின் அடிபடையில் ஒரு பெண்ணின் முன்னேற்றம் தடைபடுகிறது.

பொருளாதார ரீதியில்:

ஒரு பெண் சம்பாதிப்பதால் அவள் முன்னேறி விட்டால் என்று சொல்ல கூடாது அவள் உணர்வும், சுதந்திரமும் என்று அங்கீகரிக்க படுகிறதோ அன்று அது முழுமை பெற்று விடுகிறது அது வரை தேக்க நிலை தான். பொருளாதாரத்தில் முன்னேற்றம் என்பது வாழ்வாதாரத்தை முன்னேற்றுமே ஒழிய அவள் சுதந்திரமானவள், உணர்வுகள் புரிந்து கொள்ளபட்டது என்று எண்ணி விடாதீர்கள் என் மக்களே!!! பணம் என்றும் வெறும் பணம் தான் அது உணர்வு வழி வரும் புரிதல் அவைகளுக்கு பிடிபடாதவை. இங்கே அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

குடும்பத்தின் பார்வையில்:

சில பழமை சனாதன மனிதர்களின் குடும்பங்களிலும், சமூகம் செல்லும் வேகம் அவற்றில் பெண்ணின் பங்கு தெரியாத சில குடும்பங்களில் மட்டுமே பெண்ணை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்.

மீதியுள்ள பெரும்பான்மையான மக்கள் சமூகத்தின் மீதுள்ள பயத்தால் தான் பெண்ணின் முன்னேற்றதை தடுக்கிறார்கள்.

அவள் உடுக்கும் உடை, பழகும் இடம், நண்பர்கள், ஆண்கள், படிக்கும் இடம், வேலை செய்யும் இடம், புகுந்த வீடு என்ற இந்த சமூக தலங்கள் குறித்த பயத்தின் அடிப்படையில் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

ஒரு மனுஷி மனுஷனிடம் பேசுவதை இயல்புக்கு மாறானதாய் பார்க்கிறார்கள் அதற்க்கு கண், காது, மூக்கு வைத்து சூனியமே வைத்து விடுகிறார்கள். இது சமூகத்தின் விளையாட்டே!!! இந்த சமூகத்தின் விளையாட்டில் அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

அவளுக்கு அவளே எதிரி:

"தயக்கம் ஒரு தேசிய நோய் !!!" சுயமுன்னேற்றத்துக்கு ஒரு பெண் கவனம் செலுத்த முடியாததற்க்கு காரணம் தன்னை பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை, விழிபுணர்வு இல்லாததால்தான் . ஒரு தவறு செய்தவுடன் சமூகம் சொல்லும் எதிர்வினைகள் எதிர்க்க முடியாமல் அவள் விழுந்த இடத்கில் இருந்து பின்நோக்கி செல்கிறாள். இது முன்னேறி வந்த பெண்கள் இந்த கூற்றை உணர்ந்து இருப்பார்கள். அவளால் அவளின் முன்னேற்றம் தடை பெறுகிறது. அந்த தாழ்வு மனப்பான்மை, விழிபுணர்வுஇன்மை இவை இரண்டும் நூற்றாண்டுகளாக பெண்களுக்கு சமூகம் போதிக்கிறது. இங்கே அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

பொறுப்பானவள் பெண்:

சமூகம், குடும்பம் இரண்டையும் ஒருங்கே சேர்த்து அரவணைத்து செல்பவள் பெண், ஆண் இந்த இரண்டையும் பாதியே சுமக்கிறான் அதையும் அரைகுறையாக தான் பார்க்கிறான்

ஒரு சம்பவம்:
போன பௌர்ணமி அன்று நாள் மலை சுற்ற (கிரிவலம்) போனபோது ஒரு பெண் தனது 6 மாத குழந்தையுடன் மலை சுற்றினாள் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது ஒரு 6 மாத குழந்தையை தூக்கி கொண்டு அந்த 14 கிலோ மீட்டர் தொலைவு தூரம் எப்படி நடக்க முடியும் என்று நிச்சயம் அது பெண்மைக்கே உரிய பக்குவம் தான் இது நிச்சயம் ஆணாக இருந்தால் ஸ்தல விருட்சத்தில் குழந்தையை தொங்க விட்டு சுற்றி வந்தவுடன் எடுத்து கொள்ளலாம் என எண்ணும் ஆணின் மனம். பொறுமை, அன்பு, எளிமை போன்றவை பெண்மையின் குணமே. இவை விளங்கி கொண்டு சமூகம் (அதாவது நாம்) அனைவரும் பெண்ணியம் காப்போம் மண்ணில் நல் வண்ணம் வாழ!!!

Saturday, December 3, 2011

Imperfect Society

திராவிட கழகம் உருவாகிய காலம் முதல் இது வரை காணாத பெரிய அசிங்கம் கனிமொழிக்கு, அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் அளித்த வரவேற்பு. தெளிவான ஜனநாயக நீரோட்டதில் விழுந்த கல்!!!!. அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்.

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே - மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை

நீதிமன்றத்தில் பொய்ச்சாட்சியம் கூறியவனின் வீட்டிலே, மனிதத் தன்மைக்கு மாறான பேய்த்தனம் வந்து சேரும்; அலட்சியத்தினால் வெள்ளெருக்கம் பூக்களும் பாதாள மூலிச்செடியும் படரும்; சோம்பேறித்தனம் சகவாசம் புரியும்; பாம்புச் சீற்ரம் குடியேறும்!

இனி திராவிட குடும்பத்தில் கலிங்கத்து பரணி கண்ட பேய்யெல்லாம் குடியேறும்!!!!!!!




Sunday, November 20, 2011

நட்பின் வழியில்.(On The Farewell Party)

உன் உணர்வையும், சிந்தனையையும் நான் திருடி எழுதிய எழுத்து வடிவம் இவை.என் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காதே உன் உயிரோட்டதிலும் உணர்ந்துகொள்.விதிகளை விலக்கிவிட்டு வெற்று சடங்குகளுடன் நான் வாழ்ந்த வாழ்கை முதல், நான் யார் என்று நீ இந்த உலகுக்கு உணர்த்திய காலம் வரையிலான இடைவெளிகளை கண்களில் நீர் ததும்ப நான் பதிக்கிறேன். என்னைப்போல்  உணர்வும் உயிரும்  நோக துடிக்கும்  என் நண்பர்களுக்கு இவை அர்பணிக்கிறேன்.

ஆண் பெண் என்ற உருவ வேறுபாட்டின் தர்கத்தில்  விலகி நின்று வேடிக்கை பார்த்ததில் இடைவெளிகள் நீண்டதே ஒழிய, நம் உணர்வுகளும் சிந்தனைகளும் ஒன்றே என இறுதி நாட்களில் உன்னை நோக்கி நான் நடந்த நிமிடங்கள் குறைவுதான்.

யதார்த்தத்தையும் நிதர்சனங்களையும் வெறுப்புகளாக சம்பாதித்த நான் அதை செலவழிக்கும் வித்தையை உன்னுடன் இறுதிகாலத்தில் கற்றுக்கொண்டேன்.
பல இடங்களில் மனிதர்களையும் மன்னிப்பையும் நான் ஏற்றுகொள்ள மறுத்திருக்கிறேன் அதனால் தான் இந்த இடைவெளிகள் எனக்கு பிரிவுகளாக  தெரிகிறது.

நான் விலகி இருக்க ஆசை பட்டிருக்கிறேன் அனால் உன் எதிரிகள் யார் என்று நீ எழுதிய பட்டியலில் எனக்கு முதல் இடம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்கவில்லை.

“எப்போதோ நான் அழுத்தி வரைந்த எல்லைகோடுகள்
இன்று தேசங்கள் இல்லாத
அனாதையாய் மாற்றிவிட்டது ……”
இனி யாரும் வரையாதிர்கள் உங்கள் எல்லைகோடுகளை உணர்வுகள் மீது .

“எங்கேயோ என் சித்தாந்தம்
மொழி பெயர்க்கப்பட்டது அதனால்
இன்று மொழிரேகை இல்லா ஊமையை என்னை மாற்றிவிட்டது………”
இனி யாரும் எழுதாதீர்கள் உங்கள் சித்தாந்தத்தை   பரிபாஷையில்.

நான் சொல்லாத நன்றியையும், கேட்காத மன்னிப்பையும் இன்று ஏற்றுகொள்ளுங்கள் உங்கள் நண்பனில் ஒருவனாய்.

There is no postmodernism in the friendship and it will never change its dimension with effect on time.

You are my friend and I hope you know that’s true, no matter what happens I will stand by you. I’ll be there for you whenever you need. I will always be there even to the end.
Gone – flitted away, you taken the stars from the night and the sun from the day!

Don’t cry because it’s over.  Smile because it’s happened.

நிரந்தரமும் யதார்த்தமும் தேடும் உன் வாழ்கை பயணத்தில் என்றும் உன் நண்பனாய்.

E. Suriya Narayanan,

Kindly visit www.espirantz.wordpress.com.