Thursday, February 14, 2013

காதலர் தினம்

உலகம் சொன்ன முதல் உண்மையும், பொய்யும் இதுவே இந்த காதல்!!!

ஒலி கூட்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மொழியும், இலக்கணமும் படைபதற்கு முன்னாள் விழி கூட்டங்கள் ஒன்று சேர்ந்து எழுதி படைத்த காவியம் காதல்!!!

கடவுளின் கூடாரத்தில் கிசுகிசுத்த ரகசியங்கள் பிரபஞ்ச வெளியில் கசிந்தபோது அது காதல் எனப்பட்டது ஆம் கடவுள் காதலிதான், காதல் மொழி பேசினான். மனிதனை படைப்பதற்கு முன்னாள் அவன் முழு நேர தொழிலே காதல்!!!

அந்த பெருந் தெய்வங்களும், குட்டி தேவதைகளும்
காதலால் பேசினார்கள்
காதலை பேசினார்கள்
காதலில் பேசினார்கள்!!!

கடவுள் - கடவுள்
கடவுள் - மனிதன்
மனிதன் - கடவுள்
மனிதன் - மனிதன்
காதலால் பேசினார்கள்.

காதலும் புரட்சியும் ஒன்று தான்
இவை இரண்டும் உரச, உரச.
பேச, பேச பற்றிக்கொள்ளும்!!!

பல யுக புரட்சிகளை உருவாக்கியது காதல்.
பல தேசங்களின் எல்லை கோடுகளை நகர்தியது காதல்
காதல் சித்தாந்தங்களை உருவாக்கியது
பல தத்துவங்களை பெற்றெடுத்தது காதல்.

ஆறறிவின் அரைகுறையை உணர்த்துவது காதல், ஏழாம் அறிவின் எல்லை கோடு காதல்!!!

காதல் எதையும் வேற்றுமை பாடுதுவதில்லை, சில நேரங்களில் அவை உணர்வுகளை ஒருமையில் சேர்கிறது!!!

ஆகவே காதல் செய்வீர்!!!

காதலர் தின நல்வாழ்த்துக்கள் அன்புடன் சூரியா

Monday, December 31, 2012

Mayan Version 2.0

O.M.G எங்க வீட்டு calender is going to end today !!!!!
என்ன ஆக போகுதோ.....

Saturday, February 25, 2012

My article on Love Marriage vs Arranged Marriage on Penmai.com

காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?
இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.

காதலித்தவரை கரம்பிடிப்பது கரம்பிடித்தவரை காதலிப்பது இவை இரண்டுமே அறம் என கொள்ளபடும் எனினும் நான் காதலித்தவரை கரம்பிடிப்பது சிறந்தது என்றே சொல்ல, கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்

காதலித்தவரை கரம்பிடிப்பது என்பது நம்முடய (இருவர்) உணர்வு, புரிதல், எண்ணம், அழுகை, இவைகளை உணர்ந்து கடந்த பிறகு இந்த சமூகம் சொல்லும் திருமணம் என்ற கட்டுபாடு நிபந்தனைகள் இவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்வது ஆனால் கரம்பிடித்தவரை காதலிப்பது என்பது சமூக கட்டுபாடுகளை மட்டுமே ஏற்று கொண்ட பிறகு புரிதல் கொள்வது.

40 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு வரும் நெருக்கம், ஒத்த எண்ண அலைகள்(wavelength or frequency), உண்மையான தாம்பத்தியம் இவற்றை சில ஆண்டு கால காதல் சொல்லி கொடுத்துவிடும், பிறகு திருமணம் என்பது புரிதலின் தொடர்ச்சியே இது காதல் திருமணம் செய்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும், இன்னும் அப்படி வாழும் காப்பிய நாயகர், நாயகிகள் இருக்கிறார்கள் ஆனால் இதிகாசம் எழுத தான் ஆள் இல்லை, ஆனால் நிச்சயித்த திருமணம் நின்று அடிபட்டு, பக்குவபடவேண்டும் !!!!

காதலும், காதல் திருமணமும் தவறில்லை, இது பெற்றவர்களின் மனதை புண் படுத்தும் என்பது உண்மை தான், ஆனால் மீதி வாழ்க்கை வாழ போவது என்னவோ நாமதானே.

நம்முடய தேடல், தேவை, புரிதல் எண்ணம், கருத்து ஒற்றுமை, வெளிப்படை உணர்வு(transparency ) இணக்கம்(mutual understanding), அந்யோனியம் இந்த அடிப்படை குணங்கள் மட்டுமே உலக உறவுகள் நிலைக்க செய்யும் அடிப்படை தத்துவம். இவை காதல் திருமணத்தில் நிலைபெறுகிறது நிறைவு பெறுகிறது, ஆனால் நிச்சயித்த திருமணத்தில் இவை சந்தேகதிற்கு உரியவாயே.

குட்டி மரணம்(hypothesis):

ஒருவனின் குணம், செயல் இவை வெளிபடுத்தும் விளைவு, இதை வைத்து அவள் நமக்கு சரியானவள் என்று கண்டுபிடிக்க முடியும், எப்போது என்றாள் உறவுகளுக்கு சிக்காத நிலையில் அதை கண்டுபிடிக்க முடியும், இது காதலின் முதல் பருவத்தில் வரும் எப்படி என்றாள்
நட்பும் இல்லாமல் காதலும் இல்லாமல் ஒரு இழை காதலை வெளிபடுத்துவதற்கு (love propose )செய்வதற்கு முன்னாள் சில காலம் நம்மிடயே ஊசல் ஆடும் இதை குட்டி மரணம் என்று கூட சொல்லலாம், அதில் ஒருவனின் சுயம் (identity)வெளிவரும் அதை கொண்டே நாம் தீர்மானிதுவிடலாம் இது காதலில் மட்டுமே சாத்தியம். (இவை அனுபவதின் அடிப்படையில் வருபவை இது hypothesis)

ஆனால் நிச்சயித்த திருமணத்தில் இதை கண்டுபிடிக்க முடியாது. அதற்கு காதல் கடவுள் உங்களுக்கு வழியும் செய்யவில்லை. நல்லதோ கேட்டதோ ஏற்று கொள்ள மட்டும் துணிவு வேண்டும்.

தேடலின் வழி கிடைக்கும் ஒரு பொருளுக்கு உலகம் மதிப்பு கொடுக்கும் அப்படியே காதல் திருமணமும்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து தேடி திரிந்து
உணர்வு எண்ணம் பகிர்ந்து
மதம், இனம் துறந்து.
மொழி, உலகம், தூக்கம் மறந்து
இவன் (அ) இவள் நம்க்கும் நம் வாழ்க்கை பயனதிற்கும் சரிவருவாள், இவளே துணை என்று காதல் புரிந்து, கரம் பிடித்த பிறகு தொடரும்
வாழ்க்கை என்பது சொல், பொருள் குற்றம் நீங்கி, இலக்கண இலக்கிய ரசனை ததும்பும் வானவர் போற்றும் இதிகாசம், காப்பியம் போன்றது ஆனால் நிச்சயித்த திருமணம் என்பது எண்ணங்கள் சண்டையிட்டு எழுத்தில் வராத கவிஞ்னின் மனம் போன்றது.

இதயம் சொல்லுவதை மூளையும், மூளை சொல்லுவதை இதயமும் புரிந்து கொள்ளுவதற்கு முன்னாள் இன்னோர் இதயம் அதை புரிந்து கொண்டு அதை செயல் படுத்துமாயின் அது காதல் திருமணத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் அப்போது நிச்சயித்த திருமணம் மட்டும் வாய் அசைவிற்கு காத்துக் கொண்டிருக்கும்.எனவே காதல் திருமணம் சிறந்தது. 

Monday, December 26, 2011

பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பது குடும்பமா? சமுதாயமா?

பெண்மை தோழர் தோழிகளுக்கு வணக்கம் பெண்களின் முன்னேற்றத்திற்கு 
தடைக்கல்லாக இருப்பது சமுதாயமே என்ற தலைப்பில் நான் எழுத வந்து 
இருக்கிறேன்

எது சமுதாயம்:

சமூகம் என்பது என்னை பொறுத்தவரை கதவுகள் இல்லாத group house போல, கதவு இல்லாத மாநகராட்சியின் பழைய பேருந்து போல். அந்த பேருந்தில் யார் வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம், கவிதை எழுதலாம், கிறுக்கலாம், உணர்வு பிழம்புகள் கட்டுபடாதபோது அது உடைபடலாம். அந்த பேருந்தின் சீட்டுகளும், இஞ்ஜினும் socialism பயின்றவை அவை யார் உட்கார்ந்தாலும் ஏற்றுக்கொள்ளும், யார் நின்றாலும் பயணம் செய்யும். அப்படி பார்க்கும் போது இந்த சமூகம் என்ற பேருந்திற்கு இது தான் வரையறை, சித்தாந்தம் என்று கிடையாது. ஒரு சமையம் ஏற்றி பேசும், சில சமையம் தூற்றியும், மாற்றியும் பேசும். இன்னும் சில சமயம் மிதிபடும் கால்களுக்கு மன்னிப்பு கோராது எனவே சமூகம் சார்ந்த பிரச்சனைகள் எவை தடை கல்லாக இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி:

நான் கடந்த, கண்ட சமுதாயத்தின் அடிபடையில் எழுதுகிறேன். எவ்வளவு முன்னேறினாலும் ஒரு பெண்ணுக்கு உடன் இருக்கும் பெண்ணே எதிரி ஆகிறாள். இவை இயற்கை விதியா என்பது ஆராயச்சிக்குரியவை. பொருள் ஈட்டும் இடமாக இருக்கட்டும், சமுகமாக இருக்கட்டும் அல்லது குடும்பமாக இருக்கட்டும் முன்னேற்றம் அடையும் பெண்ணின் தவறுகள் உண்ணிப்பாய் பார்க்க படுகிறது. அறிவும் அதன் முதிர்ச்சியும் இல்லாத இன்னொரு பெண்ணால் அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

ஆண் சமூகம்

பெண் எப்படி இருக்க வேண்டும், நடக்க வேண்டும், உட்கார வேண்டும், சிரிக்க வேண்டும் , அழ வேண்டும், சமூகத்தில் அவள் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஆண்களே எழுதுகிறார்கள் . தான் எப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைபதற்கு முன்னாள் ஆண்கள் முந்திக்கொண்டு கதைகளிலும், கவிதைகளிலும், இதிகாசங்களிலும், பழமை சனாதன கொள்கையிலும் எழுதி தள்ளி விட்டார்கள், பெரும்பாலும் அவைகள் தான் இன்று பிரேசுரம்ஆகி புத்தகமஆக இருக்கிறது.

இது பெண்கள் குறித்து ஆண்கள் கொண்ட அக்கறையாக எனக்கு தெரியவில்லை. இவள் புது விதி எழுத கூடாது என்ற பயதின் முன் ஏற்பாடு தான் இவை. இவற்றிற்கு காலம் பதில் சொல்லும் இல்லை என்றாள் பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆண் சமூகம் இடையூரால் அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

சமூகம் அளிக்கும் நீதியின் அடிப்படையில்:

"மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைதால் பொன்குடம்." ஒரு ஆணும், பெண்ணும் சமூகம் சொல்லும் ethical behaviours இல் இருந்து விலகி வரும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாராமுகமாய் தீர்ப்பு சொல்கிறது இந்த சமூகம். இங்கே ஆண் செய்யும் தவறை எளிதில் விட்டு விடுகிறது ஆனால் பெண்ணின் உணர்வுகள் மீது தான் கசையடி.. ஆண் செய்யும் பொது சக ஆண் அதை பெரிது படுத்துவது இல்லை ஆனால் பெண் செய்யும் பொது சக பெண் அதை பெரிது படுத்துகிறாள், இதை சமூகத்தை தூரத்தில் இருந்து நான் பார்தவரை கண்ட அனுபவம். இங்கு நீதியின் அடிபடையில் ஒரு பெண்ணின் முன்னேற்றம் தடைபடுகிறது.

பொருளாதார ரீதியில்:

ஒரு பெண் சம்பாதிப்பதால் அவள் முன்னேறி விட்டால் என்று சொல்ல கூடாது அவள் உணர்வும், சுதந்திரமும் என்று அங்கீகரிக்க படுகிறதோ அன்று அது முழுமை பெற்று விடுகிறது அது வரை தேக்க நிலை தான். பொருளாதாரத்தில் முன்னேற்றம் என்பது வாழ்வாதாரத்தை முன்னேற்றுமே ஒழிய அவள் சுதந்திரமானவள், உணர்வுகள் புரிந்து கொள்ளபட்டது என்று எண்ணி விடாதீர்கள் என் மக்களே!!! பணம் என்றும் வெறும் பணம் தான் அது உணர்வு வழி வரும் புரிதல் அவைகளுக்கு பிடிபடாதவை. இங்கே அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

குடும்பத்தின் பார்வையில்:

சில பழமை சனாதன மனிதர்களின் குடும்பங்களிலும், சமூகம் செல்லும் வேகம் அவற்றில் பெண்ணின் பங்கு தெரியாத சில குடும்பங்களில் மட்டுமே பெண்ணை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்.

மீதியுள்ள பெரும்பான்மையான மக்கள் சமூகத்தின் மீதுள்ள பயத்தால் தான் பெண்ணின் முன்னேற்றதை தடுக்கிறார்கள்.

அவள் உடுக்கும் உடை, பழகும் இடம், நண்பர்கள், ஆண்கள், படிக்கும் இடம், வேலை செய்யும் இடம், புகுந்த வீடு என்ற இந்த சமூக தலங்கள் குறித்த பயத்தின் அடிப்படையில் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

ஒரு மனுஷி மனுஷனிடம் பேசுவதை இயல்புக்கு மாறானதாய் பார்க்கிறார்கள் அதற்க்கு கண், காது, மூக்கு வைத்து சூனியமே வைத்து விடுகிறார்கள். இது சமூகத்தின் விளையாட்டே!!! இந்த சமூகத்தின் விளையாட்டில் அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

அவளுக்கு அவளே எதிரி:

"தயக்கம் ஒரு தேசிய நோய் !!!" சுயமுன்னேற்றத்துக்கு ஒரு பெண் கவனம் செலுத்த முடியாததற்க்கு காரணம் தன்னை பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை, விழிபுணர்வு இல்லாததால்தான் . ஒரு தவறு செய்தவுடன் சமூகம் சொல்லும் எதிர்வினைகள் எதிர்க்க முடியாமல் அவள் விழுந்த இடத்கில் இருந்து பின்நோக்கி செல்கிறாள். இது முன்னேறி வந்த பெண்கள் இந்த கூற்றை உணர்ந்து இருப்பார்கள். அவளால் அவளின் முன்னேற்றம் தடை பெறுகிறது. அந்த தாழ்வு மனப்பான்மை, விழிபுணர்வுஇன்மை இவை இரண்டும் நூற்றாண்டுகளாக பெண்களுக்கு சமூகம் போதிக்கிறது. இங்கே அவள் முன்னேற்றம் தடை படுகிறது.

பொறுப்பானவள் பெண்:

சமூகம், குடும்பம் இரண்டையும் ஒருங்கே சேர்த்து அரவணைத்து செல்பவள் பெண், ஆண் இந்த இரண்டையும் பாதியே சுமக்கிறான் அதையும் அரைகுறையாக தான் பார்க்கிறான்

ஒரு சம்பவம்:
போன பௌர்ணமி அன்று நாள் மலை சுற்ற (கிரிவலம்) போனபோது ஒரு பெண் தனது 6 மாத குழந்தையுடன் மலை சுற்றினாள் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது ஒரு 6 மாத குழந்தையை தூக்கி கொண்டு அந்த 14 கிலோ மீட்டர் தொலைவு தூரம் எப்படி நடக்க முடியும் என்று நிச்சயம் அது பெண்மைக்கே உரிய பக்குவம் தான் இது நிச்சயம் ஆணாக இருந்தால் ஸ்தல விருட்சத்தில் குழந்தையை தொங்க விட்டு சுற்றி வந்தவுடன் எடுத்து கொள்ளலாம் என எண்ணும் ஆணின் மனம். பொறுமை, அன்பு, எளிமை போன்றவை பெண்மையின் குணமே. இவை விளங்கி கொண்டு சமூகம் (அதாவது நாம்) அனைவரும் பெண்ணியம் காப்போம் மண்ணில் நல் வண்ணம் வாழ!!!