Sunday, August 15, 2010

நிலைகெட்ட இந்தியா:

நிலைகெட்ட இந்தியா:

20 கோடி இந்தியன் இரவு உணவை உண்ணாமல் தூங்கியபின் நான் எழுதிய எழுத்துகள் இவை.

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?"- என்றான் மகாகவி பாரதி.

ஆனால் அடுத்தவன் உணவைவையும், நிம்மதியையும் திருடி தின்னும் உணவு சங்கிலி இன்னும் வலிமையோடு தான் இருக்கிறது, காக்கை கூட்டிற்குள் கருநாகம் புகுந்ததுபோல், நம் நாட்டின் உணவு கொள்கையில் அந்நிய ஆதிக்கம் புகுந்தது ஜனநாயகத்தின் தோல்வியே!!!

இங்கு தான் ஒரு பக்கம் infrastructure பங்குகளும், மறுபுறம் interior decoration இம் பல் இளித்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் வீராணம் குழாயில் இருந்து துரத்தபாட்ட தமிழன் இன்னும் வீடு தேடி கொண்டு இருப்பான்.

70% இந்தியா மக்கள் விவசாயதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இந்த நாட்டில் இன்னும் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கிடையாது. அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது.

"கண்ணீரோடு விதை விதைபவன்
பெருமதிப்போடு காட்டு சுமந்து வருவான்"
என்கிறது விவிலியம்(Bible) ஆனால் விதையில் அழுகை ஆரம்பித்து அறுவடை தற்கொலையில் முடிந்த விதர்பா(மராட்டிய) விவசாயி கூறும் உண்மை என்ன.

1 லிட்டர் பாலின் விலை 24 ரூபாய் 1 லிட்டர் குடிநீர் 20 ரூபாய், உற்பத்தி செலவு தெரியாத உத்தமர்களே. அதுவும் pakaged drinking water bottleல, நம்ம ஆளுங்களுக்கு mineral water னு சொல்லி விப்பான்.

பன்னாட்டு நிறுவனகளுக்கு முந்தி விரித்த ஜனநாயகத்தின் செயலால் இன்று உள்ளூர் உற்பத்தி முடங்கியே போனது .1991 இல் கொண்டுவந்த LPG (liberalisation, privatisation, globalisation) இதனால் வந்த விளைவு பண தேக்கம் இதை ஆங்கிலதில் சொல்லுவார்கள் "unequal distribution of income within the country", மேலும் இந்த LPG யால் பாடையில் படுத்த இந்தியா நிறுவனங்கள் எத்தனை.

மக்கி மண்ணாய் போனாலும் போகலாம் வறுமைக்கு வாக்கபட்டவன் வாயில் போக கூடாது என்று சொல்லும் உணவு அமைச்சரும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்.

Spectrum 0 (zero) loss என்று சொன்னால் ஊர் பையித்தியக்காரன் கூட சிரிக்கிறான் எப்பூடி அரசியல் வாதிகளால் சொல்ல முடிக்கிறது.

DOW chemicals நிறுவனத்தின் போபால் விஷ வாயு தாக்கி உயிர் இழந்தவர்கள் புதைக்க படுவதற்க்கு முன்னாள் நிறுவன முதல்வரை ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தது விட்டு, உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேடி அலைந்த என் நாட்டு பாதுக்காப்பு அமைச்சகத்தின் நெறியை நாம் அறிந்தவாயே

பணத்துக்கு பல் இளிக்கும் இந்த ஜனநாயகம், வறுமைக்கும், கேள்விக்கும் மௌனியாய் இருப்பது சாபக்கேடே.

இந்தியா முன்னேறவில்லை, பணக்காரர்களுக்காக மாறி இருக்கிறது.

"உழுபவனுக்கு நிலம் சொந்தம்
ஓட்டுபவனுக்கு டிராக்டர் சொந்தம்"
என்ற வரட்டு கம்யூனிச பிரச்சாரம் செய்ய அல்ல இது, ஜனநாயகதின் வழிபறியில் வாழ்வு இழந்த ஒரு இந்தியனின் சொல்.

அன்புள்ள தோழர் தோழிகளுக்கு, நான் தெளிவான இ
ந்திய ஜனநாயகத்தின் நீர் ஓடையில் விழுந்த பாவ கற்களை எண்ணி கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு நினைவுள்ள கற்களை இங்கே எடுத்து இங்கே எரியுங்கள்(இந்தியாவில் நடந்த பெரும் வரலாற்று தவறுகளை சுட்டி காட்டவும் மேலும் அதற்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள், இனி ஒரு வீதி செய்வோம் வாழ்வோம் இனி நல்அரசாக).

ஜெய் ஹிந்த்!!!

No comments:

Post a Comment